செந்தாழை என்றால் நம்மில் சிலருக்குத் தெரியாது.
உண்மையில் செந்தாழையை அன்னாசி என்ற பெயரிலே நமக்கு நன்கு தெரியும் .
அன்னாசி என்பது ஒரு பழம் மற்றும் அதன் மரத்தின் பெயராகும்.
இதன் தமிழ்ப்பெயர் செந்தாழை ஆகும்.
இது பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது.
அன்னாசி எனும் சொல் தமிழ்ச் சொல் அல்ல என்பது நாம் நன்கு அறிந்த ஒன்றே .
அன்னாசி என்று பிற மொழியிலிருந்து ஒலிப்பெயர்ப்பதை விட ,
செந்தாழை என்று இனிய தமிழிலிலே அழைக்கலாமே !
செந்தாழை எனும் சொல் தமிழ் அகரமுதலிகளில் :
பெயர்ச்சொல் ஒரு பழம் (தமிழில் விளக்கம்)
-செதில்கள் போன்ற சொர சொரப்பான மேல்தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப் பகுதியையும் உடைய பெரிய பழம்.
-செந்தாழை என்பது அன்னாசிப்பழத்தின் தூயதமிழாகும்.
Pineapple is known as Centhaazhai in Tamil .
No comments:
Post a Comment