தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map
Showing posts with label Some Words in Tamizh. Show all posts
Showing posts with label Some Words in Tamizh. Show all posts

1 Feb 2013

நமது சந்ததியர்கள் | நமது வம்சாவளியினரின் உரிய பெயர்கள்.

நெகிழி . Negizhi - Plastic


நெகிழி எனும் சொல் நமக்குப் புதிய சொல்லாகத் தெரியலாம். சிலருக்குப் பழக்கப்பட்டச் சொல்லாக இருக்கலாம்.

நெகிழியை நாமெல்லாம் ”பிளாஸ்டிக்” என்றழைத்தே பழக்கப்பட்டிருப்போம், ஆயினும் பிளாஸ்டிக் என்பது தமிழ்ச் சொல் அல்ல. அது ஓர் ஆங்கிலச் சொல்லாகும்.


"வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. 

நெகிழி என்னும் பொருளானது பிசைவு கொள்ளும் பொருள் ஆகும். அழுத்தம் தந்தால் வளைந்து கொடுக்காமலும் உடைந்தும் போகாமல் பிசைவு கொள்ளும் பொருட்கள் நெகிழிப் பொருள்கள் எனப்படும்.

எனவே, பிளாஸ்டிக் என்று பிறமொழிச் சொல்லில் எழுதித் தமிழைக் கொல்வதை விட, நெகிழி என இனிமையாகத் தமிழில் எழுதலாம்.

Plastic is known as "Negizhi" in tamil. Translation of Plastic Objects in tamil is "Negizhi PorutkaL". The word "Plastic" derived from a greek word "Plasticos" which means malleable thing. 

31 Jan 2013

அனிச்சம் மலர் (Anichcham Malar) - Anagallis Arvensis



அனிச்சம் மலர் கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்களில் ஒன்றாகும்.

இம்மலர் முகர்ந்ததும் வாடிவிடும் என்று (இலக்கியத்தில்) கருதப்பட்ட மலர்.

பெண்களை இம்மலரோடு குறிப்பிடுவது வழக்கமாகும்.

தன் கற்பை உயிரினும் பெரிதாய்ப் போற்றும் மங்கைகள் வேறொருவன் பார்வை தன் மேல் பட்டாலே தன்னுயிரை மாய்த்துக் கொள்வர். அதேபோல, இம்மலரும் முகர்ந்து பார்த்தாலே வாடும் தன்மைக் கொண்டதாகத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்ப் பெண் குழந்தைகளுக்கு,

அபர்ணா, நிர்வாணா என்று கொச்சையாகப் பெயர் சூட்டுவதை விட்டொழித்து விட்டு,

அனிச்சா, அனிச்சையா என இம்மலரின் பெயரைச் சூட்டுவது மிகப் பொருத்தமாகவும், பொருள்மிக்கதாகவும் இருக்கும்.
இப்பெயர்களின் உட்பொருளானது அப்பெண் ஒரு கற்புக்கரசி என்பதாகும்.

Anagallis Arvensis, (Anichcham Malar) is one of the 99 flowers, which had been mentioned in Kurinji Paattu, literated by Kabilar. This flower is said to wilt once it'd been smelled. Comparison between this flower to women had been made  by tamil folks, that once a woman had been touched by a man (which is considered to losing virginity in indian culture), she would kill herself,  just like how this flower would wilt once it had been smelled. 

9 Jan 2013

மின்கலம் (Battery)



மின்சக்தியை வேதியல் முறையில் உற்பத்தி செய்தளிக்கும் மின்னிரசாயனத் தொகுதிகளை மின்கலம் எனக் கூறுகிறோம். மின்கலங்களில் வேதியியல் தாக்கங்களின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்கு நடைபெறும் சக்தி மாற்றம் இரசாயன சக்தி மின் சக்தியாக மாற்றப்படுவதாகும்.

மின் (Electricity) எனும் சொல் மின்சாரத்தைக் குறிக்கும். அதேவேளை, கலம் என்றால் (Container) எனப் பொருள்படும். எனவே, மின்கலம் என்றால் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஒரு கொள்கலன் எனப் பொருள்படும்.

Battery is known as Minkalam in Tamil.  The word "Min" defines Electricity, meanwhile the word "Kalam" defines container. Thus, Minkalam defines a container which provides electricity. 

21 Dec 2012

சில தின்பண்டங்களின் தமிழ்ப் பெயர்கள் *Tamil Names of Certain Food


Cake ~> அணிச்சல் - ANichchal

Bread ~> வெதுப்பி - Vethuppi

Biscuits ~> மாச்சில் - Maachchil

Ice Cream ~> பனிக்கூழ் - Panikkoozh

தனித்தமிழ் விண்ணியல் *A little Astronomy in Tamil



Sun ~> கதிரவன் - Kathiravan

Moon ~> திங்கள் / நிலா - ThinggaL / Nila

Stars ~> விண்மீன்கள் - VinmeengaL

Planets ~> கோள்கள் - KOLgaL

Meteor ~> விண்கல் - ViNkal

தமிழர் நிலத்திணைகள் * Tamil Names for Landscapes



Peneplain ~> குறிஞ்சி - Kurinji

Agricultural Tract ~> மருதம் - Marutham


Desert ~> பாலை - Paalai

Maritime Tract ~> நெய்தல் - Neithal

Pastoral ~>  முல்லை - Mullai


சில கருவிகளின் தமிழ்ப் பெயர்கள்* Tamil Names of Certain Objects



Computer ~> கணினி - KaNini

Hard Disc ~> வன் தட்டு - Van Thattu

Software ~> மென்பொருள் - Men PoruL

Handphone ~> கைப்பேசி - Kaippaesi 

18 Dec 2012

சில மலர்களின் தமிழ்ப் பெயர்கள். Tamil Names of Certain Flowers



Lily  ~> ஆம்பல் - Aambal

Rose ~> முளரிப்பூ - MuLarippoo

Jasmine ~> மௌவல் - Mauval

Orchid ~> மந்தாரை - Mantharai

கணினி கலைச் சொற்கள்

கணினி கலைச் சொற்கள்



calculating---------------> கணக்கிடல் - KaNakkidal

caculations---------------> கணக்கீடுகள் - KaNakkeedugaL

caculator-----------------> கணிப்பான் - KaNippaan

calculator mode----------> கணிப்பான் நிலை - KaNippaan Nilai

cancel--------------------> நீக்கு - Neekku


capacity------------------> கொள்திறன் - KoLthiran

caps lock-----------------> மேலெழுத்துப் பூட்டு - Maelezhuththup Poottu

carriage return(CR)------> ஏந்தி மீளல் - Aenthi MeeLal

catalog-------------------> அடைவு - Adaivu

cell-----------------------> சிற்றறை, நுண்ணறை - Sitrarai NuNNaRai

cell pointer---------------> நுண்ணறைச்சுட்டி - NuNNaRaich Chutti

center--------------------> மையம், மையப்படுத்து - Maiyam, Maiyappaduththu

central processing unit(CPU)----> மைய செயலகம் - Maiya Cheyalagam

central processor---------> மையச் செயலி - Maiyach Cheyali

channel-------------------> தடம் - Thadam

character-----------------> உரு - Uru

character code------------> உருக்குறிமுறை - UrukkuRimuRai

character generator-------> உரு ஆக்கி - Uru Aakki

characteristic--------------> படி - Padi

character map-------------> உரு விவரப்படம் - Uru Vivarappadam

character recognition------> உரு அறிதல் - Uru ARithal

character set--------------> உருக்கணம்  - UrukkaNam

character string-----------> உருச்சரம் - Uruchcharam

chart----------------------> வரைபடம் - Varaippadam

clear-----------------------> துடை - Thudai

click-----------------------> ‘கிளிக்’, அழுத்து - Azhuththu

clone-----------------------> நகலி, போலிகை - Nagali, POligai

close-----------------------> மூடு - Moodu

closed file------------------> மூடிய கோப்பு - Moodiya KOppu

coaxial cable---------------> அச்சு ஒன்றிய வடம் - Achchu Ondriya Vadam

code-----------------------> குறிமுறை - KuRimuRai

collection------------------> திரட்டல் - Thirattal

color coding---------------> வண்ணக் குறிமுறை - VaNNak KuRimuRai

color graphics------------- > வண்ண வரைவியல் - VaNNa Varaiviyal

column--------------------> நெடுவரிசை - Neduvarisai

column split---------------> நெடுவரிசைப் பிரிப்பு - Neduvarisaip Pirippu

command-----------------> கட்டளை, ஆணை - KattaLai, AaNai

command key-------------> கட்டளைத்திறவு, கட்டளைப்பொத்தான் - KattaLaiththiravu, KattaLaippoththaan

comment------------------> குறிப்புரை - KuRippurai

common storage-----------> பொதுத் தேக்கம் - Pothuth Thaekkam

communication-------------> தொடர்பு - Thodarbu

communications link--------> தொடர்பு இணைப்பு  - Thodarbu INaippu

communications processor--> தொடர்பு செயலகம் - Thodarbu Cheyalagam

communications satellite----> தொடர்பு செயற்கைக்கோள் - Thodarbu CheyarkaikOL

communications software---> தொடர்பு மென்பொருள் - Thodarbu MenporuL

compaction-----------------> நெருக்கம் - Nerukkam

compare--------------------> ஒப்பிடு - Oppidu

comparison-----------------> ஒப்பீடு - Oppeedu

comparative operator-------> ஒப்பீட்டு இயக்கி - Oppeedu Iyakki

compilation-----------------> தொகுத்தல் - Thoguththal

compiler--------------------> தொகுப்பி - Thoguppi

compiler language-----------> தொகுப்பு மொழி - Thoguppu Mozhi

component------------------> உறுப்புக்கூறு - URuppukkooRu

compuserve-----------------> கணிச்சேவை - KaNichchaevai

computation-----------------> கணிப்பு - KaNippu

computer--------------------> கணிப்பொறி - KaNippoRi

computer-aided manufacturing-> கணிப்பொறிவலய உற்பத்தி - KaNippoRivalaya URpaththi

computer code------------------> கணிப்பொறி நிரல் - KaNippoRi Niral

computer game-----------------> கணிப்பொறி விளையாட்டு - KaNippoRi ViLayaattu

computer graphics--------------> கணிப்பொறி வரைவியல் - KaNippoRi Varaiviyal

computer network--------------> கணிப்பொறி வலையமைப்பு - KaNippoRi Valaiyamaippu

computer operations------------> கணிப்பொறி சார் செயல்பாடுகள் - KaNippoRi CheyalpaadugaL

computer user------------------> கணிப்பொறி பயனர் - KaNippoRi Payanar

computer utility-----------------> கணிப்பொறிப் பயனமைப்பு - KaNippoRip Payanamaippu

computerization-----------------> கணிப்பொறிமயமாக்கல் - KaNippoRimayamaakkal

computerized database----------> கணிப்பொறித் தரவுத் தளம் - KaNippoRi Tharavuth ThaLam

computerised data processing----> கணிப்பொறி வழித்தரவுசெயலாக்கம் - KaNippoRi Vazhiththaravu Cheyalaakkam

computing-----------------------> கணிப்பு - KaNippu

condition-------------------------> நிபந்தனை, நிலை - Nibanthanai, Nilai

continuous scrolling--------------> தொடர் உருளல் - Thodar UruLal

control key-> கட்டுப்பாட்டுத்திறவுகோல், கட்டுப்பாட்டுப் பொத்தான் - Kattupaattuth ThiravukOL, Kattuppaattup Poththaan

control program-----------------> கட்டுப்பாட்டு நிரல் - Kattuppaattu Niral

control statement---------------> கட்டுப்பாட்டுக் கூற்று - Kattuppaattuk Kootru

control system------------------> கட்டுப்பாட்டு அமைப்பு - Kattuppattu Amaippu

conversion----------------------> மாற்றம் - Maatram

convert-------------------------> மாற்று - Maatru

coordinates---------------------> ஆயத்தொலைவுகள் - AayaththolaivugaL

copy----------------------------> நகல் - Nagal

copy holder---------------------> நகல் தாங்கி - Nagal Thaanggi

copy protection-----------------> நகல் காப்பு - Nagal Kaappu

core storage--------------------> வளையத் தேக்கம் - VaLaiyath Thaekkam

cost analysis--------------------> விலை பகுப்பாய்வு - Vilai Paguppaaivu

cost benefit analysis------------> விலை பயன் பகுப்பாய்வு - Vilai Payan Paguppaaivu

cost effectiveness---------------> விலை பயன் திறன் - Vilai Payan Thiran

costing-------------------------> விலையிடல் - Vilaiyidal

counter------------------------> எண்ணி - ENNi

create--------------------------> படை (படைப்பு) - Padai 

cursor--------------------------> சுட்டி - Chutti

cursor control------------------> சுட்டிக் கட்டுப்பாடு - Chuttik Kattuppaadu

cursor key---------------------> சுட்டிப்பொத்தான் - Chuttippoththaan

cursor tracking----------------> சுட்டி பின் தொடரல் - Chuttip Pin Thodaral

curve fitting-------------------> வளைகோட்டுப் பொருத்தம் - VaLaikkOttup Poruththam

customize---------------------> தனிப்பயனாக்கு - Thanippayanaakku

custom software---------------> தனிப்பயன் மென்பொருள் - Thanippayan MenporuL

cut-----------------> வெட்டு - Vettu

17 Dec 2012

வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள். Sanskrit Words in Tamil

வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் என்ற இக்கட்டுரையில் நாம் அன்றாடம் தமிழ்ச் சொற்கள் போலவே பயன் படுத்தும் சில வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் பட்டியலிட்டுத் தரப்பட்டுள்ளன.

Some Sanskrit words that we use in our daily conversations are translated int
o flawless Tamil words. They are also had been transliterated for your convenience.

வடமொழிச் சொற்கள் Vadamozhi Chorkal Sanskrit Wordsதமிழ்ச் சொற்கள் Tamil Chorkal Tamil WordsEnglish Translations
அகங்காரம் Aganggaaramசெருக்கு CherukkuHaughty
அக்கிரமம் Akkiramamமுறைக்கேடு MuRaikkaeduHindrance
அசலம் Asalamஉறுப்பு URuppuOrgan
அசூயை Asooyaiபொறாமை PoRaamaiJealousy, Envy
அதிபர் Athibarதலைவர் Thalaivar President
அதிருப்தி Athirupthiமனக்குறை ManakkuRaiDispleasure
அதிருஷ்டம் Athirushtamஆசூழ், தற்போது Asoozh, TharpOthuPresent
அத்தியாவசியம் Aththiyaavasiyamஇன்றியமையாதது IndriyamaiyaathathuDisideration
அநாவசியம் Anaavasiyamவேண்டாதது VaendaathathuUnwanted
அநேகம் Anaegamபல PalaMany
அந்தரங்கம் Antharanggamமறைப்பொருள் MaRaipporuLPrivacy
அபகரி Abagariகைப்பற்று, பறி Kaippatru, PaRiReave, Bereave
அபாயம் Abaayamஇடர் IdarDanger
அபிப்ராயம் Abipraayamகருத்து KaruththuComment
அபிஷேகம் Abishaegamதிருமுழுக்கு ThirumuzhukkuUnction, Anointing, Ordination
அபூர்வம் Aboorvamபுதுமை PuthumaiWonder, Miracle
அமிசம் Amisamகூறுபாடு KooRupaaduFeature
அய்யோக்கியன் Aiyokkiyanநேர்மையற்றவன் NaermaiyatravanRogue
அர்த்தம் Arththamபொருள் PoruLMeaning


அர்த்த ஜாமம் Arththa Jaamamநள்ளிரவு NaLLiravuMidnight
அர்ப்பணம் ArppaNamபடையல் PadaiyalOffertory
அலங்காரம் Alanggaaramஒப்பனை OppanaiMakeup, Makeover
அலட்சியம் Alatchiyamபுறக்கணிப்பு PurakkaNippuNeglect , Contempt
அவசரமாக Avasaramaagaவிரைவாக, உடனடியாக Viraivaaga , UdanadiyaagaFast, Instant
அவஸ்தை Avasthaiதொல்லை, நிலை Thollai, NilaiTroublesome , Nuisance
அற்பமான ARpamaanaகீழான, சிறிய Keezhaana, SiRiyaPaltry, Petty
அற்புதம் ARputhamபுதுமை PuthumaiMiracle, Newness
அனுபவம் Anubavamபட்டறிவு PattaRivuExperience, Empirical
அனுமதி Anumathiஇசைவு IsaivuPermission

அறிந்துக் கொள்வோம்...Tamil Names of Certain Animals. சில விலங்குகளின் தமிழ்ப் பெயர்கள்.



Penguin - பனிப்பாடி (Panippaadi)

Lion - அரிமா (Arimaa)


Spider - சிலந்தி (Chilanti)

Dolphin - ஓங்கில் (Oangkil)

Armadillo - அழுங்கு (Azhungku)

Dinosaur - தொன்மா (Thonmaa)

28 Oct 2012

அறிந்து கொள்வோம்...

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் தமிழ்ப் பெயர்கள்,
Tamil Names of objects that we use in our daily life.


Toothbrush - பற்தூரிகை , PaRthoorigai

Plastic - நெகிழி , Negizhi

Pen - தூவல் ,Thooval

Thermometer - வெப்பமானி , Veppamaani

Laptop - மடிக்கணினி , MadikaNini

Bulb - மின்குமிழ் , Minkumizh

Chenthaazhai [Pineapple]


செந்தாழை என்றால் நம்மில் சிலருக்குத் தெரியாது.
உண்மையில் செந்தாழையை அன்னாசி என்ற பெயரிலே நமக்கு நன்கு தெரியும் .
அன்னாசி என்பது ஒரு பழம் மற்றும் அதன் மரத்தின் பெயராகும்.
இதன் தமிழ்ப்பெயர் செந்தாழை ஆகும்.
இது பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது.

அன்னாசி எனும் சொல் தமிழ்ச் சொல் அல்ல என்பது நாம் நன்கு அறிந்த ஒன்றே .
அன்னாசி என்று பிற மொழியிலிருந்து ஒலிப்பெயர்ப்பதை விட ,
செந்தாழை என்று இனிய தமிழிலிலே அழைக்கலாமே !

செந்தாழை எனும் சொல் தமிழ் அகரமுதலிகளில் :
பெயர்ச்சொல் ஒரு பழம் (தமிழில் விளக்கம்)
-செதில்கள் போன்ற சொர சொரப்பான மேல்தோலையும் சாறு நிறைந்த வெளிர் மஞ்சள் நிறச் சதைப் பகுதியையும் உடைய பெரிய பழம்.
-செந்தாழை என்பது அன்னாசிப்பழத்தின் தூயதமிழாகும்.

Pineapple is known as Centhaazhai in Tamil

5 Aug 2012

Wild Jasmine Flower (Mauval)



மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மரமல்லிகை) என வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம். இந்த மலரின் அரும்புகள் மகளிரின் பல் வரிசைக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளன.

சங்கநூல் குறிப்புகள் ;-

௧) குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று மௌவல்.


௨) குடியிருப்பு மனைகளில் இதனை நட்டு வளர்ப்பர். 
      இரவில் பூக்கும் இந்த மலர் சுற்றிலும் மணக்கும். 

௩) ஊர் ஓரப் பள்ளங்களில் இது வளர்க்கப்படும். 

௪) மல்லிகை, மௌவல், சண்பகம் ஆகியவை வெவ்வேறு மலர்கள். 

௫) மகளிர் சிரிப்பது போலப் பூக்கும். 

௬) சில பெண்களின் பற்களை இக்காலத்தில் ‘அரிசிப்பல்’ எனப் பாராட்டுவர்.    இதனைச் சங்கப்பாடல்கள் மௌவலோடு ஒப்பிட்டுப் பாராட்டுகின்றன.

௭) நொச்சிச் செடி ஆற்றங்கரைகளில் வளரும். 

௮) இது ஆற்று நொச்சி. வீட்டில் நட்டு வளர்க்கும் மௌவலை ‘மனைநொச்சி’ எனவும் வழங்கினர்


Wild Jasmine flower is known as Mauval in Tamil. This  Wild Jasmine flower had been recorded by our ancestors in Sangam Literature.

1) Wild Jasmine flower is defined as though they were used in bath by females who lived in a place called Kurinji.
2) Wild Jasmine trees were planted in every homes and this flower, which blooms at night has a pleasant smell.
3) Jasmine (Malligai) , Wild Jasmine (Mauval) and Michelia Champaca (Senbagam) are three different kinds.
4) The sight when it blooms , defined as the laughter of females.

Toothbrush (PaRthoorigai)


பற்தூரிகை என்பது பல் துலக்கப் பயன்படும் உபகரணமாகும். சிறு தூரிகையையும் கைப்பிடியையும் கொண்டதாக அமைந்திருக்கும். பற்தூரிகையில் பற்பசை சேர்த்துப் பயன்படுத்தும் வழக்கம் பரவலானதாகும். பெரும்பாலும் செயற்கைப் பொருட்களாலேயே பற்தூரிகைகள் உருவாக்கப்படுகின்றன. இயற்கைப் பொருட்களால் உருவாக்கப்படும் தூரிகைகளும் உண்டு. வேப்பங்குச்சி போன்றனவற்றைப் பல்துலக்கப் பயன்படுத்தும் வழக்கமும் தமிழர் மத்தியில் உண்டு.("ஆலும
் வேலும் பல்லுக்குறுதி." என்ற கூற்று.) 
பற்தூரிகைகள், தூரிகையின் கடினத்தன்மையில் வேறுபடுகின்றன. பல் மருத்துவர்கள் மென்மையான தூரிகையுள்ள பற்தூரிகைப் பயன்பாடே பற்சுகாதாரத்துக்குப் பொருத்தமானது என்கிறார்கள்.

மின்சாரத்தில் இயங்கும் பற்தூரிகை முதன்முதலில் 1939 இல் உருவாக்கப்பட்டது. ஆயினும் 1960களிலேயே பரவலான விற்பனைக்கு வந்தது.

பெயர் விளக்கம் ;-

பற்தூரிகை என்பது பல்லைத் துலக்கப் பயன்படும் தூரிகை(Brush) எனப் பொருள்படும். ஆங்கிலத்தில் Toothbrush என்று அழைக்கப்படுகிறது.


A toothbrush in known as "PaRthoorigai" in tamil. A toothbrush is used to brush teeth with some toothpaste on it. Toothbrushes are mostly made of plastic materials. People in India , often use a neem stick as toothbrush to brush their teeth. Dentists recommend brushes with soft brushes to be used for oral hygiene ; they are safe too.


Electronic toothbrushes are invented in 1939. However , they were only had been widely used in 1960s.

Orange Fruit (Naranthampazham)


7 Stages of a Female பெண்களின் 7 பருவங்கள்


7 Stages of a Male ஆண்களின் 7 பருவங்கள்


Categories

Flash Labels by Way2Blogging