தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

5 Aug 2012

Wild Jasmine Flower (Mauval)



மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மரமல்லிகை) என வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம். இந்த மலரின் அரும்புகள் மகளிரின் பல் வரிசைக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளன.

சங்கநூல் குறிப்புகள் ;-

௧) குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று மௌவல்.


௨) குடியிருப்பு மனைகளில் இதனை நட்டு வளர்ப்பர். 
      இரவில் பூக்கும் இந்த மலர் சுற்றிலும் மணக்கும். 

௩) ஊர் ஓரப் பள்ளங்களில் இது வளர்க்கப்படும். 

௪) மல்லிகை, மௌவல், சண்பகம் ஆகியவை வெவ்வேறு மலர்கள். 

௫) மகளிர் சிரிப்பது போலப் பூக்கும். 

௬) சில பெண்களின் பற்களை இக்காலத்தில் ‘அரிசிப்பல்’ எனப் பாராட்டுவர்.    இதனைச் சங்கப்பாடல்கள் மௌவலோடு ஒப்பிட்டுப் பாராட்டுகின்றன.

௭) நொச்சிச் செடி ஆற்றங்கரைகளில் வளரும். 

௮) இது ஆற்று நொச்சி. வீட்டில் நட்டு வளர்க்கும் மௌவலை ‘மனைநொச்சி’ எனவும் வழங்கினர்


Wild Jasmine flower is known as Mauval in Tamil. This  Wild Jasmine flower had been recorded by our ancestors in Sangam Literature.

1) Wild Jasmine flower is defined as though they were used in bath by females who lived in a place called Kurinji.
2) Wild Jasmine trees were planted in every homes and this flower, which blooms at night has a pleasant smell.
3) Jasmine (Malligai) , Wild Jasmine (Mauval) and Michelia Champaca (Senbagam) are three different kinds.
4) The sight when it blooms , defined as the laughter of females.

No comments:

Post a Comment

Categories

Flash Labels by Way2Blogging