கம்பர் |
கம்பர் இராமாயணம் பாடிப் பெரும் புகழ்பெற்றவர் கம்பன். தமிழ் இலக்கியத்தில் கம்பர் இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம். வால்மீகியைப் பின்பற்றி எழுதியிருப்பதாகக் கம்பரே சொல்லுகிற போதிலும், கம்பராமாயணம் சமஸ்கிருத மூல நூலின் மொழிபெயர்ப்பு ஆகாது; அதன் தழுவலும் இல்லை; கதை நிகழ்ச்சிகளைச் சொல்லுகிற பொழுதிலும், அதன் முக்கிய பாத்திரங்களைப் படைக்கும் முறையிலும், கம்பன் தனித்த உத்திகளை வால்மீகியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கையாளுகிறான். ஆழமான கவிதை அனுபவத்தையும் புலமைத் திறனையும் கற்பனை ஆற்றலையும் கம்பனின் கைவண்ணமாகப் பார்க்கிறோம். பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் திருவழுந்தூர் என்றழைக்கப்படும் தேரழுந்தூர் ஆகும்.
Kambar was the author of the great epic , Ramayana. His creations were very popular amongst of all the others in Tamil. Kambar's creations are neither adapted nor translated from sanskrit , eventhough he had wrote about Vaalmeeki. Kambar is an imaginative , creative and linguistic person. Kambar was born at Theruzhunthoor which is located at Naagappattinam district , Maayilaaduthurai , Thiruvazhunthoor.
No comments:
Post a Comment