மயில் என்பது பறவை இனத்தைச் சேர்ந்த ஒருவகை உயிரினமாகும்.
இலக்கியங்களில் மயிலை மஞ்ஞை , மஞ்சை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மயில்கள், ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. தோகையில் வரிசையாகக் 'கண்' வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது. நீண்டதூரம் பறக்க இயலாத மயில்கள் உயரமான மரங்கள் போன்றவற்றில் ஏறி அமர்ந்துக் கொள்ளும்.
மயில்கள் போதுமான வசிப்பிடம் இன்றியும் , தோகைக்காக வேட்டையாடப் படுவதாலும் வெகுவாகக் குறைந்து விட்டன.
இதுபோன்ற எழில்மிகு உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டியது நம் கடமை தானே ?
Peacock is known as Mayil / Magnchai in Tamil .
No comments:
Post a Comment