தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

18 Apr 2013

முதுமக்கள் தாழிகள் - Usage of Urns in ancient Tamil Civilisation.

முதுமக்கள் தாழிகள் என்பன பண்டைய தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள். ஈமத்தாழிகள் என்றும் அழைக்கப்படும் இவை பற்றி சங்கப் பாடல்களிலும் குறிப்புகள் உள்ளன. 

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பற்றி ஐயூர் முடவனார் பாடிய புறநானூற்றுப் பாடல் (புறம் 228) முதுமக்கள் தாழி பற்றி குறிப்பிடுகிறது. ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லதுஎலும்புகளை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம். 

இவ்வாறு புதைக்கப்பட்டத் தாழிகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன. உடல் செயலிழந்த முதியவர்களை உயிருடன் புதைக்கவும் இத்தாழிகள் பயன்பட்டன என்ற கருத்தும் நிலவுகிறது.


படம் ;- தமிழகத்தில் தொன்மையான முதுமக்கள் தாழிகள் கிடைப்பதுண்டு. அவ்வாறு கிடைத்த முதுமக்கள் தாழிகளைச் சேமித்திருக்கும் ஆரோவில் தமிழ் மரபு மையத்தின் காட்சி.

Urns were often used to comprise dead person to bury them in soil. These urns are also called as  "Eemathaazhigal" . Notes about them are featured in sangam literature. 

The urns were used to contain the dead person's personal belongings and bones and then they would be buried underground. These urns were found in many places around Tamil Nadu by Archeologists. 


தமிழர் தற்காப்புக் கலை - களரிப்பயிற்று Tamil Martial Arts - KaLarippayitru


களரிப்பயிற்று என்பது பழந்தமிழகத்தில் தோன்றிய ஒரு தற்காப்புக் கலையாகும். இது அடிமுறை என்றும் அழைக்கப்படும். இன்று இது கேரளாவிலும் பயிலப்படுகிறது எனினும், நெடுங்காலமாக தமிழர் பயன்றுவந்த விருத்தி செய்த தமிழர் தற்காப்புக் கலைகளில் இதுவும் ஒன்று. 



இந்தக் கலை பற்றிய பழைய ஏடுகள் தமிழிலேயே உள்ளன என்பது இதற்கு சான்றாகும். களரிபயத்து அடித்தல், உதைத்தல், கொழுவிப் பிடித்தல், தொடர்தாக்குதல் நகர்வுகள், ஆயுதங்கள் ஆகியவற்றையும், உடற்பிடித்தல் மூலிகைகள் போன்ற மருந்துவ நுணுக்கங்களையும் உள்ளடகிய ஒரு முழுமையான கலையாகும்.

வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு, கண்டகோடாலி, மழு போன்ற ஆயுதங்களை களரி விளையாட்டில் பயன்படுத்துவர். களரி, வடக்கன் களரி, தெக்கன் களரி என இருவகைப்படும். 

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துகுடி ஆகிய பகுதிகளிலும் கேரளாவிலும் இக்கலை வடிவம் உள்ளது. களரி வீரர்கள் களரி நிகழ்வின் போது கடவுள், குரு, ஆயுதம், களம் ஆகியவற்றை வணங்கி பின் துவங்குவர். களரி கற்றுக் கொடுக்கும் ஆசான் அல்லது குரு மருத்துவம் தெரிந்தவராகவும் இருப்பார்.


The KaLaripayitru or KaLaripayattu

The KaLapayitru is one of the ancient tamil martial art. It is also known as  "Adimurai" . It is now widely practised in Kerala, it was found and spreaded by Tamils in ancient times.

Records of this martial arts was written and published in tamil dated hundreds of years ago. Various weapons are being used in this martial art, such as , knife, sword, antler, axe and bill. KaLari has been classified into two, "Vadakkan KaLari" ( Northen KaLari ) and "Thekkan KaLari" ( Southern KaLari ). 

உலகத் தமிழர்கள்

உலகத் தமிழர்களின் மக்கள்தொகை

உலகத் தமிழர்களின் எண்ணிக்கை






தமிழ் மொழி இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் மட்டும் தான் பேசப்படுகிறது என்பது தவறு. மேலும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் இந்திய தமிழர்கள் தான் அங்கு தமிழை வளர்க்கிறார்கள் என்பதும் தவறு.

உண்மை என்னவென்றால், 19-ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசால் தென்னிந்தியா மற்றும் ஈழத்தில் இருந்து மலாயா (மலேசியா), சிங்கை (சிங்கப்பூர்) மேலும் மொரிசியசு, பர்மா போன்ற நாடுகளுக்குத் தமிழர்கள் படைமறவர்களாகவும் தோட்டத் தொழிலாளிகளாவும் பணிப்புரிய கொண்டு வரப்பட்டனர். பர்மா வாழ் தமிழர்கள் அந்நாட்டின் விடுதலைக்குப் பின்னர் மீண்டும் தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். மலாயா, சிங்கை, மொரிசியசு வாழ் தமிழர்கள் மட்டும் தமிழர்களும் இந்நாடுகளில் ஒரு குடிமக்களாக வாழ தொடங்கி விட்டனர். தற்பொழுது மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் ஐந்தாவது தலைமுறை தமிழர்கள் வாழ்கின்றனர். இந்நாடுகளில் தமிழ் மொழி ஒரு அலுவல் மொழியாக(Official language) உள்ளது. மேலும், சிங்கையின் பணத்தாள்களில் தமிழ் எழுத்துகளைக் காணலாம். அது போல, மொரிசியசு பணத்தாள்களில் தமிழ் எழுத்துகளுடன் தமிழ் எண்களையும் காணலாம். மலேசியாவின் அனைத்துலக வானூர்தி நிலையங்களில் தமிழில் அறிவிப்புகளைக் கேட்கலாம். மலேசியா, சிங்கை, மொரிசியசு நாடுகளில் மட்டுமே ஏறத்தாழ மூன்று மில்லியன் தமிழ் குடிமக்கள் வாழ்கின்றனர்.
ஒரு சிறு வேண்டுகோள், இனியாவது தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்று தன்நலமாகப் பேசாமல்... உலகத் தமிழர்கள் என்று பொதுநலமாகப் பேசுங்கள். தமிழ்நாட்டில் வாழ்ந்தால் தான் தமிழர்கள் என்றாகி விடாது. உலகில் எந்த இடுக்கிலும், தமிழைப் பேசி தமிழச்சியைத் தாயாய்க் கொண்டுள்ளார்களோ.. அவர்களெல்லாம் தமிழர்களே!

16 Apr 2013

வள்ளுவர் கோட்டம் - விலைமதிப்பில்லாச் சிற்பக்கலை Valluvar Kottam - Priceless Sculpture


திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்ட நினைவகங்களில், திருவள்ளுவர் கோட்டமும் ஒன்றாகும். இந்நினைவகம், சென்னையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1976 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதன் நீளம் 128 அடிகள் (39 மீட்டர்கள்) ஆகும். வள்ளுவர் கோட்டத்தின் அவைக்கூடம் (மண்டபம்) ஏறக்குறைய 4000 பேர் அமரக் கூடிய வசதி படைத்தாகும்.




இந்த எழில்மிகு நினைவகத்தை அமைத்த பெருமை பெயர்போன தமிழ்நாட்டுக் கலை திறன் வாய்ந்த சிற்பி கணபதியையே சேரும். அவர்தான், கன்னியாகுமரியில் இருக்கும் திருவள்ளுவர் சிலையையும் அமைத்தவர் ஆவார். 

Valluvar Kottam is a popular monument in Chennai, India which is dedicated to the classical Tamil poet, philosopher and saint Thiruvalluvar. Valluvar Kottam is located at the intersection of the Kodambakkam High road and the Village road (Chennai, Tamilnadu). The construction of Valluvar Kottam is like a temple chariot, and it is a replica of the temple chariot in Thiruvarur. A life-size statue of the Thiruvalluvar has been installed in the 39-m-high chariot. The auditorium of Valluvar Kottam can accommodate around 4,000 people. 

The architect of the memorial is South Indian traditional architect V. Ganapati Sthapati, who is also the architect of the Thiruvalluvar Statue at Kanyakumari.

Categories

Flash Labels by Way2Blogging