முதுமக்கள் தாழிகள் என்பன பண்டைய தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள். ஈமத்தாழிகள் என்றும் அழைக்கப்படும் இவை பற்றி சங்கப் பாடல்களிலும் குறிப்புகள் உள்ளன.
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பற்றி ஐயூர் முடவனார் பாடிய புறநானூற்றுப் பாடல் (புறம் 228) முதுமக்கள் தாழி பற்றி குறிப்பிடுகிறது. ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லதுஎலும்புகளை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம்.
இவ்வாறு புதைக்கப்பட்டத் தாழிகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன. உடல் செயலிழந்த முதியவர்களை உயிருடன் புதைக்கவும் இத்தாழிகள் பயன்பட்டன என்ற கருத்தும் நிலவுகிறது.
படம் ;- தமிழகத்தில் தொன்மையான முதுமக்கள் தாழிகள் கிடைப்பதுண்டு. அவ்வாறு கிடைத்த முதுமக்கள் தாழிகளைச் சேமித்திருக்கும் ஆரோவில் தமிழ் மரபு மையத்தின் காட்சி.
Urns were often used to comprise dead person to bury them in soil. These urns are also called as "Eemathaazhigal" . Notes about them are featured in sangam literature.
Urns were often used to comprise dead person to bury them in soil. These urns are also called as "Eemathaazhigal" . Notes about them are featured in sangam literature.
The urns were used to contain the dead person's personal belongings and bones and then they would be buried underground. These urns were found in many places around Tamil Nadu by Archeologists.
No comments:
Post a Comment