தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

24 Feb 2013

ஈழம் வென்ற சோழன் . Chozhan, The conqueror of Eezham (Sri Lanka)


இராசராசன் வலிமை மிக்கக் கடற்படையைக் கொண்டு இலங்கையை வென்றான் என திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்கின்றன. அப்போது ஐந்தாம் மகிந்தன் இலங்கை வேந்தனாக இருந்தான். சோழ நாட்டு மண்டலங்களில் ஒன்றாக மாறிய ஈழம் 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப் பெயர் பெற்றது. இலங்கையின் தலைநகராகத் திகழ்ந்த அநுராதபுரம் போரில் அழிந்தது. 'சனநாத மங்கலம்' என்று புதிய பெயர் சூட்டப்பட்டு 'பொலன்னருவை' ஈழத்தின் புதியதலைநகராயிற்று. இங்குள்ள ஒரு பௌத்த-விகாரையின் பெயர் ராசராச பெரும்பள்ளி. ராசராசசோழ மன்னனின் பெயரில் இது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விகாரை அக்காலத்தில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இராசேந்திரன் 'வானவன் மாதேச்சுரம்' என்ற பெயரில் இங்கு கற்றளி எடுத்தான். ஈழ மண்டலத்தில் உள்ள சில ஊர்களை தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்திற்கு நிவந்தமாக அளித்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சிறந்த கடற்படையைப் பெற்றிருந்த இராசராசன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, இந்தியாவின் மேற்குக் கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள முந்நீர்ப் பழந்தீவு எனப்படும் இலட்சத்தீவுகள் மீதும், கிழக்குப் பகுதியில் தென்கிழக்காசியப் பகுதியிலுள்ள கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக இவன் காலத்திய செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது.

The great Raja raja Chozhan had conquered the Eezham (Sri Lanka) by the great force of navy. Eezham was then ruled by the fifth Maginthan (fifth son) , then conquered  by the Chozhas and renamed as "Mummudi Chozha Mandalam" . The capital of Eezham, Anuraathapuram was completely destroyed during the war. "Polannaruvai" was renamed as "Chananaatha Mandalam" and later has been announced as Eezham's new capital. A buddhist monastery named "Rasa rasa Perumpalli" proves the existence of the Chozhas in Eezham (Sri Lanka). Another buddhist monastery in Naagapattinam, Tamil Nadu with the exact same name was also existed a long time ago. A temple built of stone was built by Rajenthira Chozhan in the name of "Vaanavan Maathechuram". Found that some cities in Eezham was then allotted for duties in the building process of the Thanjai Peruvudaiyaar temple. 



A silver coin dated Uthama Chozhan's time, that was found in Ilangai (Sri Lanka)




No comments:

Post a Comment

Categories

Flash Labels by Way2Blogging