தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

31 Jan 2013

சுப்ரமணிய பாரதியார் - Supramaniya Baarathiyaar



---தமிழ்மொழி வாழ்த்து---

தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி 
வாழிய வாழிய வே! 

வான மளந்த தனைத்தும் அளந்திடும் 
வண்மொழி வாழிய வே! 

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி 
இசைகொண்டு வாழிய வே! 

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! 
என்றென்றும் வாழிய வே! 

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் 
துலங்குக வையக மே! 

தொல்லை வினை தரு தொல்லை யகன்று 
சுடர்க தமிழ்நா டே! 

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! 
வாழ்க தமிழ்மொழி யே! 

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து 
வளர்மொழி வாழிய வே!

No comments:

Post a Comment

Categories

Flash Labels by Way2Blogging