ஆழிப்பேரலை எனப்படுது "சுனாமி" எனும் அலைகளைக் குறிக்கும் சொல்லாகும்.ஆழி என்றால் கடல் எனவும் , பேரலை என்றால் பெரிய அலைகள் என்றும் பொருள்படும்.ஆழிப்பேரலையைச் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளனர் நம் ஆதி தமிழர்கள்.மேலும்,ஆழிப்பேரலை கடற்கோள் என்றும் அழைக்கப்படும்.இது போன்ற ஆழிப்பேரலைகள் மிகப் பெரிய பேரழிவுகளை நமக்கு உண்டாக்குகின்றன. தமிழர் வாழ்ந்த பெரும் கண்டமான குமரியைக் கொள்ளை கொண்டு போனதே இந்த ஆழிப்பேரலைகள் தான் !! யப்பானிய (ஜப்பானிய) மொழியில் சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள்படும். தமிழில் ஆழிப்பேரலை என்று கூறுவது துறைமுக அலை (சுனாமி) எனும் சொல்லை விட மிகப் பொருத்தமாக அமையும்.
கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாக பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.
Aazhi defines ocean or deep sea , whilst paeralai means large[huge] waves. Tsunami is a japanese word used to call huge waves. Aazhipaeralai causes catastrophic effects to humankind. Researches say that, the tamilian's territory , The Lemuria or Kumarikandam was vanished by those aazhipaeralai. Earthquakes under seabed causes aazhipaeralai.
No comments:
Post a Comment