தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

8 Dec 2011

Tamizh

1. கிழங்கு தமிழனுக்குத் தெரியும். முதன் முறையாக உருண்டை வடிவில் ஒரு கிழங்கைப் பார்க்கிறான். அதற்கு 'உருளைக்கிழங்கு' என்று பெயர் வைத்தான்.

2. மிளகு பயிரிட்டான் தமிழன். மிளகு போல உறைப்பு தன்மை கொண்ட ஒரு வகை பயிர் முதன் முறையாக வெளிநாட்டிலிருந்து வருகிறது. அதற்கு 'மிளகு காய், மிளகாய் எனப் பெயரிட்டான்.

3. வெள்ளைக்கார அறிவியலாளன் எலும்பைப் படம் பிடிக்கும் ஒரு கதிரைக் கண்டு பிடிக்கிறான். என்ன பெயர் வைப்பது எனத் தெரியாமல் X-Ray என்று வைக்கிறான். ஆனால், தமிழன் அதற்கு 'ஊடுகதிர்' என அருமையாய் பெயர் வைத்தான்.

4. Internet வந்தது. தமிழ்நாட்டில் கூட 'இன்டர்நெட்' என்றுதான் சொன்னார்கள். ஆனால், மலேசியத் தமிழர் ஒருவர் 'இணையம்' எனும் நல்ல தமிழ்ச் சொல்லைக் கொடுத்தார்.

இப்படி இன்னும் பல சொற்களை அடுக்கிச் சொல்லாம். அப்படித்தான் iphone, ipad, ipod, netbook, ebook ஆகியவற்றுக்கு நல்ல சொற்களைத் தக்கார் கண்டிப்பாக உருவாக்கித் தருவர்

No comments:

Post a Comment

Categories

Flash Labels by Way2Blogging