தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

5 Feb 2013

நன்மை தரும் நெல்லிக்கனி . Benefits of Gooseberries.



நீண்டகாலம் வாழ்ந்து, அவ்வையார் தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும் 
என்ற நோக்கில், தனக்கு கிடைத்த அரிய வகை நெல்லிக்கனியை, அவ்வையாருக்கு மன்னர் அதியமான் கொடுத்ததாக வரலாறு உண்டு. இவ்வளவு சிறப்பும், பயனும் உள்ள நெல்லிக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் - சி அதிகம் உள்ள இந்த நெல்லிகாய் உடலுக்கு வலிமையைத் தரக்கூடியது. 

நோய் எதிர்ப்புச் சக்தி உடையது. நீரிழிவு நோயாளிகள் நெல்லிக்கனியை தொடர்ந்து சாப்பிடலாம். சுண்ணாம்பு சத்து (கால்சியம்), இரும்பு சத்துள்ள இந்த நெல்லிகாய் தலைமுடியைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

தலைமுடி வேர்கள் வலுவாக இருக்க உதவுகிறது. முடி உதிர்வதை தடுக்கிறது. இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய இந்த நெல்லிக்காய் பார்வை குறைபாடு ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது. வயிற்றுபோக்கு ஏற்படாமல் தடுக்கிறது. 

இதுபோன்ற பல்வேறு நன்மைகளை உடைய இந்த நெல்லிக்காய், முதுமையை தடுத்து நம்மை இளைமையாக வைத்திருக்க உதவுகிறது. ஏராளமான பயன்களை கொண்ட நெல்லிக்காய், தாராளமாக கிடைக்க கூடியது. எனவே, நீங்களும் நெல்லிக்காயை விரும்பி சாப்பிடலாமே.

People believe, King Athiamman presented these gooseberries to Tamil Poet, Auvaiyaar, so that she could live longer and contribute to the language furthermore. These gooseberries are so nutrious, they are rich in vitamin-C and antibiotics. These berries are best to be eaten by people who suffering from diabetes. Gooseberries are also good for hair growth and strength. They're also growing resistance to heart diseases to the consumer. Gooseberries are also rich in Calcium. Eating gooseberries would decrease the risk of having eyesight problems and digestion problems. 

No comments:

Post a Comment

Categories

Flash Labels by Way2Blogging