தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

16 Jun 2012

Mangosteen Fruit [Kadaare Murugal]


கடாரம் என்றால் , மலேசியாவின் கெடா மாநிலத்தைக் குறிக்கும் சொல்லாகும் ; தற்பொழுது இச்சொல் மலேசிய நாட்டைக் குறிக்கவும் பயன்படுகிறது..முருகல் என்றால் முதிர்ச்சியடைந்த(பழங்கள்)-ஐக் குறிக்கும் சொல்லாகும். கடார முருகல் மலேசியா போன்ற நாடுகளில் அதிகமாகப் பயிரிடப்படுவதால் , இப்பழத்தை கடார முருகல் எனத் தமிழில் அழைப்பர்.

கடார முருகல் அல்லது மங்குஸ்தீன் எனப்படுவது ஒருவகை பழத்தின் பெயராகும்.இப்பழத்தை மங்குஸ்தீன் என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.தமிழில் கடார முருகல் என்ற பெயர் இப்பழத்திற்கு உண்டு.இது சுண்டாத் தீவு மற்றும் இந்தோனேசியாவின் மொலாக்கா பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இம்மரம் 7 முதல் 25 m (20–80 அடி) உயரமானது. கடார முருகல் (உள்ளோட்டுச் சதயம்) இனிப்பும் இலேசான புளிப்பும் கொண்டதாகவும் , சாற்றுத்தன்மையும் சிறிதளவும் நார்த்தன்மையுமுள்ள பழமாகவும் காணப்படும். இது வெள்ளை நிறமுடையது. பழத்தின் சுற்றுக்கனியம் கருங்கபில நிறமானது. 

இலங்கையில் தாழ்நில ஈரவலயத்தைச் சேர்ந்த களுத்துறை, கம்பகா,கொழும்பு, காலி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் கேகாலை, கண்டிமாவட்டங்களில் சில பகுதிகளிலும் மங்குசுத்தான் பயிரிடப்படுகிறது. பொதுவாக வீட்டுத்தோட்டப் பயிராகவே இது செய்கை பண்ணப்படுகிறது.

Mangosteen is known as Kaadara Murugal in Tamil . Kadaaram is the name used to call the place Kedah , in Malaysia. As mangosteens widely ripe in Sunda islands and across Malaysia , This is might be the reason it has such a name. Murugal means riped fruits.

No comments:

Post a Comment

Categories

Flash Labels by Way2Blogging