தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

21 Dec 2012

வைரமான தமிழர்கள்



வைரம் என்பது நமக்கு ஓர் உயர்ந்த அணிகலனாகத்தான் தெரியும். சரி தமிழர்கள் ஏன் வைரத்திற்கு “வைரம்” என்று பெயர் வைக்கவேண்டும் ?
இது போன்ற கேள்விகளுக்கு விடைகள்தான் தமிழர்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அக்காலத்திற்கு ஏற்ற “உயரிய அறிவியலையும், நாகரீகத்தையும்” கொண்டிருந்தார்கள் என்று உணரமுடியும்.

இவ்வுலகத்திலேயே மிக உறுதிவாய்ந்த பொருளாக வைரம் கண்டறியப்பட்டுள்ளது. தனிமத்தின் உறுதியைக் கணக்கிட “மோ(Mohs scale)” என்ற அளவீட்டை கி.பி.1812-ல் ஜெர்மனியைச் சோ்ந்த ஃபிரடரிக் மோ என்ற ஆய்வாளரால் கண்டறியப்பட்டுப், பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த மோ அளவீட்டின் உச்சபட்ச எண் 10 ஆகும். இது வைரத்தினுடைய உறுதியெண் ஆகும்.

தமிழில் வைரம் (வயிரம்) என்றால் உறுதி என்று பொருள்.
தமிழில் ஒரு சொல்வடை காலங்காலமாக உள்ளது ”இது வைரம் பாய்ஞ்ச கட்டை”.
இதன் பொருள் என்ன வைரம் என்ற தனிமம் நிறைய உள்ளது என்றா? இல்லையேல் கட்டை உறுதிவாய்ந்ததாக உள்ளது என்றுதானே பொருள்.

பல மொழிகளில் அதனுடைய முக்கியப் பண்புக்குப் பொருத்தமில்லாதப் பெயர் இருக்கும் பொழுது தமிழில் மட்டுமேன வைரத்தின் மிகமுக்கியப் பண்பைக் குறிக்கும் பெயர் இருக்க வேண்டும்???
வைரத்தின் தனித்தன்மையை உணர்ந்தே “வைரம் என்ற பண்புபெயருக்கு” உச்சபட்ச உதாரணமாக இருக்கும் இத்தனிமத்திற்கு வைரம் என்று பெயர் வைத்துவிட்டனர்.

உலகில் பெரும்பாலான மக்கள் தங்கள் அறிவியலே இல்லாத பண்பாட்டில் அறிவியலை தினறித்தினறி தினிக்கின்றனர்…. ஆனால் நாம்???

நன்றி : மெய்யப்ப அருண். ( http://www.facebook.com/arun.mei )

*This Article will be edited in English real soon*

2 comments:

  1. அருமையாக உள்ளது... தொடரட்டும் உங்கள் பணி.. வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete

Categories

Flash Labels by Way2Blogging