தமிழில் சில சொற்கள் தமிழ்ப் பேச தமிழ் எழுத, படிக்க இன்னும் சில தமிழர் பண்பாடு இயல் இசை நாடகம் தமிழர் வரலாறு Image Map

18 Jun 2012

சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி , தமிழ்மொழியே !

சிந்துவெளியில் பேசப்பட்ட மொழி என்னவென்று இன்னும் அறியப்படாமல்/மறைக்கப்பட்டு வருகிறது.
உண்மையில் சிந்துவெளியில் நடப்பில் இருந்த மொழி ஆதி திராவிட மொழி என்று கூறுவதை விட பழந்தமிழ் மொழி என்று கூறுவதே மிகப் பொருந்தும்.
இதற்கான சான்றுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைத் தூக்கத் தொடங்கி விட்டன..


மயிலாடுதுறையில் சிந்துவெளி எழுத்துக்கள்


மயிலாடுதுறையில் கண்டறியப்பட்ட 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடாரி
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து. இதன் காலம் கி.மு. 2000 - கி.மு. 1500 ஆகும். காவிரிக்கரையில் சிந்துசமவெளி சின்னங்கள்


தமிழ்நாட்டின் காவிரி கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக் கப்பட்ட சிந்து சமவெளி நாகரிக குறியீடுகளைப்போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.



No comments:

Post a Comment

Categories

Flash Labels by Way2Blogging